கண்ணீர்ப் பூக்கள் [சிறுகதை]



OFF WITH YOUR HEADS!!


சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்திருந்தது ரீட்டாவின் வதனம். நேரே சங்கரை நோக்கி வந்தவள், திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனை தாண்டி சென்றாள்.

சங்கர் மெதுவாக புத்தகத்தை கையில் எடுத்தான். இன்று தான் வயதுக்கு வந்த ஒரு மங்கை ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது. அது மு. மேத்தாவின் 'கண்ணீர் பூக்கள்' கவிதை தொகுப்பு. புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுரை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அவசரமாக கடிதவுறையை கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் "கடிதவுறைக்கு வலிக்குமோ...?" என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சங்கரின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.

'கடிதவுறைக்கு வலித்துவிடக்கூடது' என்ற போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சங்கர்;

"மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உன் நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது...."

ரீட்டாவின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து, அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சங்கரின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

"என்னவனே! நீ என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறாய் என்பதனையும் அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உன்னால் முடியாமல் போனதனையும் நானறிவேன்"

"உன்னை போல் தான் நானும்; உன்னை இரண்டு வருடமாக காதலித்தும் உன்னிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும். என் இதயத்தின் சாவி உன்னிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை. மேலும் .....

    உன்னைப்போல்
    இன்னும் எத்தனை பெண்கள்
    காதலித்த செய்தியை
    காதலர்க்கு சொல்லாமல்
    கணவருக்கு சொன்னவர்கள்?

வைரமுத்துவின் கேள்விக்குறி க்குள் சிக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.

பாடசாலையில் என் பின்னே எத்தனை பேர் அலைந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது. நீ வேணும்டா செல்லம்...!"

- இப்படிக்கு உன் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உன் ஜீவன்; ரீட்டா"

வாசித்து முடித்தான் சங்கர். அவனால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் கண்கள் ஆனந்த கண்ணீர் பூக்களை உதிர்த்தது. கடிதத்தை முத்தமிட்டவாரே கடிதவுரையை திருப்பினான்.

கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களை தொட்டது.

"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் சுரேசை சந்திக்க முடியவில்லை. தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை சுரேசிடம் சேர்க்கவும்!"

அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் பூக்களில் உப்பு கரிப்பதை உணர்கிறான் சங்கர்.

முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி நிமிஷக் கரையான்களுக்கு இல்லை என்பதை சங்கர்

  -ஜாவிட் ரயிஸ்




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More