ஞாபக முட்கள் [கவிதை]

Fleurir pour la dame?

    என் அரைசாண் இதயத்தின்
    அந்தம் வரை தொட்டவளே!
    ஆழமான உன் மனதை
    ஆக்கிரமித்து- இன்று
    ஓரமாய் கிடப்பவன் நான் !
    ◙

    பனித்துளி-
    சூரியனில் நிழல் கண்டதும்
    சூரியன் சென்று
    பனியில் குளிர்க்காய்ந்ததும்
    ஒரு காலம்

    பனித்துளியே சூரியனை
    சுட்டெரிப்பது என் நிகழ்காலம்
    ◙

    ஒற்றை பார்வையிலே
    உயிரை இடம் பெயர்த்தவளே
    இன்று
    பெயர்த்த இதயத்தை
    ஒளித்துகொண்டதேன்?
    ◙

    உன் நினைவுகளை வரவேற்க
    என் இதயத்தில்
    அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்

    நீயோ
    புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்
    என் நினைவுகளை புதைப்பதற்கு
    ◙

    உன் மனதை நானும்
    என் மனதை நீயும்
    உடுத்திக்கொண்டு
    என்னில் நீயும்
    உன்னில் நானும்
    உறைந்துபோன

    அந்த நிமிஷங்கள்
    என் சவப்பெட்டியை கண்டதும் தான்
    உன் நினைவுக்கு வருமா?
    ◙

    "போகிறேன்" என்றதுமே
    "போய் வா!" என்று சொல்ல
    பொய்த்துப்போன
    உன் நாவு
    "வந்திருக்கிறேன்" என்றதும்
    "போய்விடு!" என்று சொல்ல
    வழி பார்த்துக் கொண்டிருந்ததேன்?
    ◙

    என் நினைவுகள் வராமலிருக்க
    உன் மனதுக்குள் - என்ன
    ஊரடங்கு சட்டமா?

    -ஜாவிட் ரயிஸ்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More