இதயத்தை நோக்கி ஓட வேண்டிய
என் குருதிக் கலங்கள் எல்லாம்
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...
செங்குருதி துனிக்கைகளையும்
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்
எல்லா மலரையும் விட்டு விட்டு
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது
என் நாசி
நீ விழி திறக்கையில் விடியலையும்
விழி மூடுகையில் இரவினையும்
மாறி மாறி அனுபவிக்கிறது
என் உலகம்
உன் புன்னகையினை சேமிக்க
உன் உதடுகளின் கீழே
ஞாபக வங்கியை
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்
தத்தித் தத்தி நடக்கும்
உன் பிஞ்சுக் கால் தடங்களை
தித்திப்போடு தொடர்கிறது
என் பாதங்கள்
உடம்பின் ஒவ்வொரு அணுவும்
தனித்தனியாய்
இன்பமடைந்து களிக்கிறது
மழலை மொழியில் நீ
"நானா!" ("சகோதரா") என்று அழைக்கும்
ஒரு நொடியில்
-ஜாவிட் ரயிஸ்
.
0 comments:
Post a Comment