காத்திருப்பு



ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

தொலைதூரப் பள்ளத்தாக்குகளில்
தாழ்ந்து
மலைமுகடுகளை முத்தமிடும்
பால்நிறத்து முகில்கள்;
நிறைவேறா வேட்கைகளை
இதயத்தில்  ஏந்தியபடி
தொடர்ந்தும் தொடரும் என் காத்திருப்புகள்

இந்த இளவேனிலின் சாயலில் வந்துவிடு
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த காதல் தொடரும்
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த துரதிஷ்டசாலியின் வாழ்வில்
சோக நிழல்கள் தொடரும்

இந்த தாரகைகள், எப்பொழுதும் போல
தூசுபடிந்து போய்விடக்கூடாது,
வா, உன் ஏக்கத்தில் விழித்திருக்கும் இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்

ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

 


உருது மொழிக் கவிஞன் Sahir Ludhianvi யின் intizaar என்ற கவிதையின் 99% தழுவல். (கவிதையின் கட்டமைப்பிலும், சொற்கையாளுகையிலும்  உள்ள வேறுபாட்டினாலும்  'மொழி பெயர்ப்பு' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன். )

-ஜாவிட் ரயிஸ்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More