கவிதையின் வெற்றியும் போலி சாமியாரும்..... [கட்டுரை] [விமர்சனம்]

Boy and Girl
எல்லோருக்கும் பொதுவான மனக்குமுறல்களை பட்டைப்போட்டு திட்டப்படுத்தி கூறி வெற்றிபெறும் ஒரு போலி சாமியாரின் வெற்றிக்கும் ஒரு கவிதையின் வெற்றிக்கும் மிகுந்த வித்தியாசமில்லை என்றே நான் சொல்வேன்.

கோபம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு உணர்வு; கோபத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. "எனக்கு கோபம் வருவதே இல்லை" என்று யாராவது கூற முடியுமா? இருப்பினும் "உங்களுக்கு கோபம் வருவது அதிகம், உங்கள் கோபத்தினால் உங்கள் வாழ்வில் நீங்கள் நிறைய விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்று கூறுகையில் "கோபம் விபரீதமானது" என்ற அறிவுடைமை தோற்றுப்போய் "என்னைப் பற்றி என் முகத்தை பார்த்தே சரியாக சொல்கிறார்" என்று சாமியாரை கடவுளாய் பார்க்கின்றான் சாதாரண  மனிதன்.

இதே போல தான் ஒரு கவிதையின் வெற்றியும்...

ரசிகன் மனதில் ஏதோ ஒரு மூலையில் வார்த்தை வடிவம் பெற முடியாமல் முடங்கிப்போய் இருக்கும் கற்பனைகளை ஒரு கவிஞன் வார்த்தை வடிவில் தரும் போது ரசிகன் மனதில் முடங்கிப்போயிருந்த எண்ணங்கள் குதித்து எழுகிறது. கவிதையும் வெற்றி பெறுகிறது.

காதலியை இன்னொருவன் கைப்பிடித்த பின்பும் தன் மனதில் காதலின் வேர்களை தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு காதலனுக்கு வைரமுத்துவின் "இலையில் தங்கிய துளிகள்" தேசிய கீதமாவதில் ஐயம் ஏதுமில்லை.
"கடைசி விடைசொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான்
'நீங்களே இவளுக்குத்
தாலி கட்டியிருக்கலாம்" 
உண்மைக்கும் இந்த வரிகளுக்கும் தூரம் அதிகம் என்றாலும் தோற்றுப்போன ஒரு காதலனுக்கு எதிர்பார்ப்பு கலந்த ஆறுதல் சொல்லும் இந்த வரிகளில் இளைஞன் உசும்பிப்போகும் போது வெற்றிபெறுகிறதுகவிதை.


- ஜாவிட் ரயிஸ் 




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More